விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்.
விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறுசீரமைப்பு தொடர்பான SSA-2 ஆலோசனைக் கூட்டம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செ. சிவா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இயக்க மறுசீரமைப்பு SSA-2 மண்டல பொறுப்பாளருமான R.N. பழனிச்சாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, மாவட்ட பார்வையாளரும் முன்னாள் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான C.S. ஜெய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் நகரம், கோலியனூர் ஒன்றியம் மற்றும் மண்டல் தலைவர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், கட்சியின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் M.D. குலாம் மொய்தீன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை T. ராமமூர்த்தி, முன்னாள் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் RTV. சீனிவாசகுமார், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் N. செல்வராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
பேட்டி -இயக்க மறுசீரமைப்பு SSA-2 மண்டல பொறுப்பாளருமான R.N. பழனிச்சாமி.

















