பூம்புகாரில் நடைபெறும் மூன்றாம் கட்ட தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து, கடலுக்கு அடியில் அமைச்சர் கையெழுத்திட்ட வீடியோ காட்சிகள் வெளியீடு :-
காவிரி நதி கடலுடன் கலக்கும் பூம்புகாரில் தொல்லியல் துறை சார்பில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் பண்டைய தலைநகரம் குறித்த இந்த ஆய்வில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் , இன்று அகழ்வாராய்ச்சி நடைபெறும் நடுக்கடல் பகுதிக்கு நீச்சல் வீரர்களுடன் சென்று, நீரில் மூழ்கும் சிறப்பு உடைகள் உடன், நீருக்கடியில் சென்று பார்வையிட்டார். நீருக்கடியில் பண்டைய கால மண்பானை ஓடுகளை அவர் பார்வையிடும் காட்சி மற்றும் , தொல்லியல் துறையின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து கடலுக்கு அடியில் கையெழுத்திட்ட வீடியோ காட்சிகள், செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் கடலுக்கடியில் கையெழுத்திடும் காட்சிகள் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

















