மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு முதலுதவி அளித்து கமிஷன் பெறுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு செல்ல வலியுறுத்தும் அரசு மருத்துவர், வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், தொழில் நுட்ப ஊழியர்கள் போதிய அளவில் பணியில் இல்லாத காரணத்தால், சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு தஞ்சை அல்லது திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் எலும்பு முறிந்து சிகிச்சைக்கு வந்த பெண்மணி ஒருவருக்கு எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் ரவீந்திரன் என்பவர் காலில் கட்டு போட்ட பின்பு, அந்தப் பெண்மணியை மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்துகிறார். இது பற்றி தனியார் மருத்துவமனைக்கு தொலைபேசியில் அவர் பேசும் காட்சியும், பாதிக்கப்பட்ட பெண்மணியின் உறவினர்களிடம் நான் வெளியில் பேசி விட்டேன் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லுங்கள் என்று வலியுறுத்தும் காட்சியும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகள் இருந்தும் அரசு மருத்துவர்கள் தனது சுய லாபத்திற்காக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பயமுறுத்தி தனியார் மருத்துவமனைக்கு கமிஷன் பெறுவதற்காக அனுப்பி வைக்கும் அவலம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக நோயாளிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு வருகின்றனர். மருத்துவர்கள் எதை சொன்னாலும் கேட்கும் அவலமும் அவர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளையும் நாம் தட்டாமல் சாப்பிட்டு வருகிறோம் அப்படி ஒரு சூழ்நிலை மாறிவிட்டது. இந்த அறியாமையை பயன்படுத்தி சில மருத்துவர்கள் தனது சுய லாபத்திற்காக அரசு மருத்துவமனையிலேயே இது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களைப் பணியில் இருந்து நீக்கும்படி சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை கொடுத்து வருகின்றனர்.

















