நேபாள் நாட்டில் பேரிடரில் சிக்கி மாயமான மயிலாடுதுறையை சேர்ந்தவர்களை அடையாளம் காண விருப்பமுள்ளவர்கள் டிஎன்ஏ சோதனை எடுத்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வட்டாட்சியர் குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேபாளில் காணாமல் போனவர்களை அடையாளம் காண தலா ஒருவரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த குடும்பத்தினர்:-
நேபாளம் புனித பயணத்துக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 57 பயணிகள் யாத்திரை சென்று இருந்தனர். அவர்களில் 21 பேர் மட்டுமே இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் மயிலாடுதுறையை சேர்ந்த 7 பேர் சென்றிருந்த நிலையில் மணிமேகலை, ரத்தினகுமார்- பூங்குழலி தம்பதி ஆகிய மூன்று பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக மயிலாடுதுறைக்கு திரும்பி உள்ளனர். ஆனால் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேஸ்வரி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வெங்கட்ராமன், புஷ்பலதா ஆகியோர் மாயமாகி மீட்கப்படாத நிலையில் இன்று காணாமல் போன குடும்பத்தினரை மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராகவன் நேரில் சந்தித்ததார். காணாமல் போனவர்களை தொடர்பு கொள்ள அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்கு நேபாள் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி காணாமல் போனவர்களின் முதல் நிலை உறவினர்களின் டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு அரசால் சென்னை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மண்டலங்களில் தடய அறிவியல் ஆய்வகங்களின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் காணாமல் போனவர்களின் தாய் தந்தை, மகன், மகள் ஆகீயொரில் ஒருவர் சோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார். அப்போது காணாமல் போன ராஜேஸ்வரி கணவர் உதயகுமார் என்பவர் மாயமாகி உள்ள நான்கு பேரின் குடும்பத்தில் தலா ஒருவரை நேபால் நாட்டிற்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது கோரிக்கை விடுத்தார். டிஎன்ஏ சோதனை எடுத்து நேபால் அரசின் வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு நேபாள் நாட்டிற்கு விருப்பமுள்ளவர்கள் சென்று வர கட்டுப்பாட்டு அறை என் 18003093793, 8069009901, 8069009900 என்ற தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாட்சியர் விஜயராகவன் தெரிவித்தார்.

















