திருவாரூர் டாஸ்மார்க் அலுவலகம் முன்பு டாஸ்மார்க் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் காலி மதுபாட்டில்கள் திரும்பத் வாங்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அதன் ஸ்டிக்கர்களை டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றத.
காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு டாஸ்மார்க் ஊழியர்களை பயன்படுத்தக்கூடாது, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் , விசாரணை நடத்தாமல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை பணி நீக்கத்தை திரும்ப பெற்று உடனே பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் கடையடைப்பு செய்து ஸ்டிக்கர் பெட்டியுடன் ஊர்வலமாக எடுத்து சென்று ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டிக்கர்களை திரும்ப பெறும் வரை கடைகளை திறக்க மாட்டோம் எனவும் முழக்கங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 200 கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
பேட்டி: அருள்மணி













