டாஸ்மாக் கடைகளில் காளி பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம், மாவட்டம் முழுவதும் 43 கடைகள் அடைப்பு :-
தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடையில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தியும், டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன, திடீர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, டாஸ்மாக் மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் கடை வாசலில் காத்து கிடக்கின்றனர். மேலும் F1 மதுபான கடையில் விலை உயர்ந்த சரக்குகளை கூடுதல் விலைக்கு பெற்றுச் செல்கின்றனர், இதனால் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.













