தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் உள்ள ரேணுகா தேவி அம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் மற்றும் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்ட மீனவ தலைமை கிராமம் தரங்கம்பாடியில் உள்ள ரேணுகா தேவியம்மன் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது அதனைத் தொடர்ந்து தினம்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது விழாவின் முக்கிய நிகழ்வான இன்று பல்வேறு வண்ண மலர்களால் ரேணுகா தேவியம்மன் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் எழுந்தருள செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு ஊஞ்சலை சுற்றி பெண்கள் கும்மியடித்து ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை எதிரே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ரேணுகா தேவியம்மன் கோவிலுக்கு சென்றனர் அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.













