மயிலாடுதுறை காவிரிக்கரையில் உள்ள பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் 7-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு யானை மீது காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரும் வைபவம். பெண்கள் முளைப்பாலியை தலையில் சுமந்து மங்கல சின்னங்கள் முன்னே செல்ல புனித நீர் கடங்கள் கோபுர கலசங்கள் ஊர்வலம். முளைப்பாலி பாடல் பாடி கும்மி அடித்து பெண்கள் உற்சாகம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் காவேரி கரை திம்மநாயக்கன் படித்துறையில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் புணரமைக்கப்பட்டு வருகின்ற 7-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காவிரியில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்து வரும் வைபவம் நடைபெற்றது. பல்வேறு நதிகளில் சேகரிக்கப்பட்ட புனித நீர் காவிரி துலா கட்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு பெண்கள் முளைப்பாலியை தலையில் சுமந்து புனித நீர் அடங்கிய கடத்தை மாயூரநாதர் கோயில் அபயாம்பிகை யானை மீது ஏற்றி நடைபெற்ற ஊர்வலத்தில் மேளதாள வாத்தியங்கள் இசைக்க மங்கள சின்னங்கள் முன்னே செல்ல கோபுர கலசங்கள் புனித நீர் கலசங்கள் முளைப்பாலிகள் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து பெண்கள் முளைப்பாலியை வைத்து கும்மி பாடல் பாடி கும்மியாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தொடர்ந்து பூர்ணாஹுதி நடைபெற்றது. இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் 6 கால யாகசாலை பூஜை நடைபெற்று வருகின்ற 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

















