நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது உத்திரகண்ட் மாநிலத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-
உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாலி காவல் நிலையத்தில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பானு.சேகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்று, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

















