தரங்கம்பாடி அருகே ராஜீவ்புரம் பகுதியில் தாட்கோ நிலத்தில் நவீன இறால் வளர்ப்பு மையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதின் பெயரில் தற்காலிகமாக போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ராஜீவ்புரம் பகுதியில் தாட்கோவிற்கு சொந்தமான 70 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் உள்ளது. இப்பகுதியில் ஷிபா நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசின் தாட்கோ நிறுவனத்தின் சார்பாக நவீன இறால் வளர்ப்பு மையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது ஏற்கனவே இப்பகுதியில் தனியாரால் அமைக்கப்பட்ட இறால் குட்டைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதியில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் இறால்குட்டை கழிவுநீர் வாய்க்கால்களில் வெளியேறி இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பயனற்று போனது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தாட்கோ நிலத்தில் ஷிபா
நிறுவனம் தமிழக தாட்கோ நிறுவனம் சார்பாக நவீன இறால் வளர்ப்பு மற்றும் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விவசாயம் மற்றும் விவசாயக் கூலி வேலையை நம்பியுள்ள ராஜீவ்புரம் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் தாட்கோ மூலம் புதிய இறால் குட்டைகளோ அல்லது அரசு சார்ந்த இறால் வளர்ப்பு மையங்களோ அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நவீன இறால் குட்டை அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற தொடங்கியதை தொடர்ந்து ராஜீவ்புரம் கிராம மக்கள் மற்றும் இறால் பண்ணை எதிர்ப்பு கூட்டமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக, விசிக, உள்ளிட்ட கட்சியினர் இணைந்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர் போராட்டம் நடைபெற இருந்த நிலையில் போராட்ட இடத்திற்கு வந்த வட்டாட்சியர் ராகவன் தலைமையிலான தாட்கோ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சில நிமிடம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் போராட்டத்தை விளக்கிக் கொண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது வட்டாட்சியர் மற்றும் தாட்கோ அதிகாரிகள் பொதுமக்கள் ஒருமித்த கருத்தாக நவீன இறால் குட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த தகவலை மாவட்ட நிர்வாகத்திடம் கூறி இந்த இறால் குட்டை அமைப்பது குறித்து உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர் அதுவரை இறால் பண்ணை அமைப்பதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்தனர் இதனால் இப் போராட்டம் தற்காலிகலாம்மாக விளக்கிக் கொள்ளப்பட்டது மேலும் இறால் குட்டை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்

















