வழுவூர் கிராமத்தில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவிற்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் யானைமேல் வெகுவிமர்சையாக கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜைகள் துவக்கம்’:- :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமம் வடக்கு தெருவில் பிரசித்து பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளது. யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக நதிகளில் சேகரிக்கப்பட்ட புனித நீர் யானைமீது ஏற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் இருந்து மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை மேல் ஏறி சிவாச்சாரியார் புனித நீர் அடங்கிய கடங்களை எடுத்து வந்தார். மேலதாள வாத்திய்ங்கள் முழங்க பெண்கள் முளைப்பாலி எடுத்து நடைபெற்ற ஊர்வலத்தில் கிராம வீதிகளை சுற்றி யானைமேல் புனிதநீர் ஊர்வலம் நடைபெற்று ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கியது நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.















