October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

FQL நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு 

by Satheesa
September 1, 2026
in News
A A
0
FQL நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் எப்.க்யூ.எல் நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏஜென்டின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு:- மயிலாடுதுறை காவல் நிலையத்தில் குவிந்த கிராமமக்கள்;-

எஃப்.க்யூ.எல். எக்ஸ்சேஞ் என்ற பெயரில் செல்போன் செயலியில் பணம் செலுத்தி விளையாடினால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என்றும், குறைந்தபட்சம் ரூ.54 ஆயிரம் செலுத்தினால் ஒருநாளைக்கு இவ்வளவு தொகை கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகூறி மதுரை கட்டையம்பட்டியை சேர்ந்த ரஞ்சித், அருண் ஆகியோர் தெரிவித்ததோடு இடைத்தரகர்கள் மூலம் பல பேரை இணைத்துள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை அருகே அப்பங்குளத்தை சேர்ந்த ஏஜென்ட் பேபி மற்றும் மதுரை கட்டையம்பட்டியை சேர்ந்த செல்வா, அருண் ஆகியோர்; மூலம் அப்பங்குளம் கிராமத்தில் உள்ளவர்கள் இணைந்துள்ளனர். ஒவ்வொருவரும் புதிதாக 5 நபர்களை சேர்த்தால் தான் ஓரே வாரத்தில் ரூ.15,000 பணம் கிடைக்கும் என்று மூளைச்சலவை செய்ததால் 150-க்கு மேற்பட்டவர்கள் ரூ.54,000, ரூ.1 லட்சம் பணத்தை ஆப்பில் டெபாசிட் செய்து இணைந்துள்ளனர். அமேரிக்கா டாலர் 500-ம், 3 சிக்னலுக்கு 4500 ருபாய் மதிப்பில் டாலர் சேர்ந்துள்ளது.. டாலர் மதிப்பில் பணம் வருவதுபோன்று குறுஞ்செய்திகளையும் செல்போனுக்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் எஃப்.கியூ.எல். எக்ஸ்சேஞ் மோசடி செய்துள்ளது ஏமாற வேண்டாம் என்று விளம்பரம் வந்த நிலையில் ஏஜென்ட் அப்பங்குளம் பேபியிடம் கேட்டபோது செலுத்திய பணத்தில் பாதி தருகிறோம் என்று கூறியதால் பணம் கட்டியவர்கள் அவர்கள் மூலம் அறிமுகமானவர்களுக்கு இடையே திரும்ப பணத்தை கேட்டு பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து நேற்று மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் எஃப்.கியூ.எல்லில் பணத்தை செலுத்தி ஏமாந்த அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் பணத்தை மீட்டுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு அளித்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 75 பேர் பேபியின் வீட்டை இன்று இரவு முற்றுகையிட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை நேரிடாமல் தடுக்கும் பொருட்டு மயிலாடுதுறை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, அவர்களை மயிலாடுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், ஏஜென்ட் பேபியை காவல் நிலையத்துக்கு வந்து விளக்கம் அளிக்கவும் கூறிச்சென்றனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். காவல்நிலையத்துக்கு வந்த பேபியை விசாரித்துவிட்டு திங்கள் கிழமை காவல் நிலையம் விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளனர். தங்களை ஏமாற்றிய பேபியை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரங்கம்பாடியில் அமைச்சர் வெங்கடரமணன் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்

Next Post

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையின் மகளிர் வார்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையின் மகளிர் வார்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையின் மகளிர் வார்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

புழலில் லாரி உரிமையாளர் மீது அவதூறு பரப்பி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கிவைத்தார்1.02 கோடி இலக்கீடு நிர்ணயம்

September 30, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.