சீர்காழி அடுத்த கொள்ளிடம் கரையோர கிராம மக்களை வஞ்சிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி கொள்ளிடம் மேற்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் .
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம், புதிய பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயபாரி ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
சித்தமல்லி ஆ. பழனிசாமி (மாவட்ட செயலாளர்) தலைமையில் நடைபெற்றது.போராட்டத்தின்
முக்கியக் கோரிக்கைகளான
சாலை சீரமைப்பு பணங்காட்டாங்குடி முதல் காட்டூர் வரை உள்ள கொள்ளிட ஆற்றங்கரை சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.
கரை பாதுகாப்பு சந்தப்படுகை, திட்டுப்படுகை, நாதல்படுகை, முதலைமேடுதிட்டு மற்றும் முதலைமேடு உள்ளிட்ட கிராமங்களில் மண் அரிப்பைத் தடுக்க ஆற்றங்கரை ஓரம் கருங்கல் அடுக்கி கரையை வலுவாக்க வேண்டும்.
புறவழிச்சாலையில் (Bypass) இணைப்புச் சாலை அமையாததால் பாதிக்கப்பட்ட கொள்ளிடம் கடைவீதி வர்த்தகத்தை மீட்டெடுக்க உடனடியாக இணைப்புச் சாலை அமைக்க வேண்டும்.
மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அளக்குடியில் தடுப்பணை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இறுதியில் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனுக்களை அளித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் எனவும் தெரிவித்தனர் .
இப்போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினர், விவசாய சங்கத்தினர், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர் .















