நேபாள் நாட்டில் பெரு வெள்ளத்தில் சிக்கியவர்கள், நலமுடன் திரும்பவும், உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும் வேண்டி தருமபுரம் ஆதீனத்தில், கோளறு பதிகம், தேவாரப் பாடல்கள் பாடி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது, காணாமல் போனவர்கள் உறவினர்கள் பங்கேற்பு, அழிவிலிருந்து இறைவன் காப்பாற்ற வேண்டுமெனவும் மீண்டவர்களுக்கு, பாஸ்போர்ட் விசா இல்லை என்றாலும் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதீன மடாதிபதி உருக்கமான பேட்டி :-
நேபாள் இயற்கை பேரிடரில் சிக்கியவர்கள் நலமுடன் திரும்பவும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அந்நாட்டில் இயல்பு நிலை திரும்பவும் வேண்டி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. ஸ்ரீசொக்கநாதர் பூஜை மடத்தில் நடைபெற்ற நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, தீபம் ஏற்றி, சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இதில், தருமபுரம் தேவார பாடசாலை மாணவர்கள், திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம், நெடுங்குளம் இடர் களையும் பதிகம், உள்ளிட்ட தேவாரம் பதிகங்களை ஆகியவற்றை பாடி வழிபாடு செய்தனர். தொடர்ந்து அனைவரும் இரண்டு நிமிடம் மௌனம் அனுசரித்தனர். இதில், நேபாளில் சிக்கியுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.சிவஞானத்தின் உறவினர் செந்தில்ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதி இன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், இடர்பாடுகளில் சிக்கியவர்கள் நலமுடன் திரும்ப வேண்டி சொக்கநாதர் அருளை பிரார்த்திக்கிறோம், மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மீண்டும் கிடைத்தவர்களுக்கு பாஸ்போர்ட் விசா இல்லை என்றாலும் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பைட் :-
தருமபுரம் ஆதீன 27ஆவது குரு மகா சன்னிதானம்














