விழுப்புரம் தெற்கு நகர தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் 74-வது பிறந்தநாள் விழாசிறப்பாக கொண்டாடினர்
விழுப்புரம்:
தேமுதிக நிறுவனத் தலைவர், கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் தெற்கு நகர தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் இளையராஜா, வடக்கு நகர செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆதவன் முத்து, அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் ஆனந்தன், மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் சீனிவாசன், கண்ணபிரான், சீதாபதி, சாதிக் பாஷா, கார்த்திக், ஆதிநாராயணன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி, அவரது புகழை போற்றும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்













