90 நாட்களில் ஒரு லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திடுக்கிடும் பல சாலை விபத்து காட்சிகளை காட்சி படுத்தி விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் 90 நாட்களில் ஒரு லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று திட்டம் வகுத்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
இந்நிலையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இறுதி நாளான 90 வது நாளில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 2500 பேர் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலைகளில் நடைபெற்ற பல திடுக்கிடும் சாலை விபத்து காட்சிகளை சேகரித்து அதை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காட்சி படுத்தி எந்தெந்த வகையில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன சாலை விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு விளக்கங்களை எடுத்துக் கூறி 90 நாளில் ஒரு லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தியுள்ளார்.















