தொடர் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி இருவருக்கும் மற்றும் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கும் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. ஆட்சியர் உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழையூர் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் கடந்த 11.07.2026ம் தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாகசாலை கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் கபிலன் (29) என்பவரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதேபோல கடந்த 13.07.2026ம் தேதி மயிலாடுதுறை மணக்குடியில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை திருவிழந்தூர் பாபு மகன் சூர்யா(26) என்பவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டல் செய்தது தொடர்பாக கடந்த 08.06.2026-ந் தேதி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட கட்டளைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (47) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இவர்கள் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட கபிலன், சூர்யா, மகேந்திரன் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் கஞ்சா விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்ட கபிலன், சூர்யா ஆகிய 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மபிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் பாலியல் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட மகேந்திரனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.















