வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-
நேற்று டெல்லி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடலை பாடும் பொழுது, அக்கட்சியின் முன்னாள் தலைவர் திருமதி சோனியா காந்தி, பாடலை நிறுத்தும்படி தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்ட திருமதி சோனியா காந்தியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று சோனியா காந்தியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்















