திருவாரூரில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 80 மீட்டர் நீளமுள்ள மூவர்ண கொடி அணிவகுப்பில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேசப்பற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்*
நாடு முழுவதும் 80 ஆவது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் 80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 80 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான மூவர்ணக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண கொடி பேரணியை மருத்துவ செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
80 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான மூவர்ணக் கொடி அணிவகுப்பில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு தேசிய ஒற்றுமை, தேசப்பற்று மற்றும் நாட்டின் வளர்ச்சியை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகையுடன் பேரணியில் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பேரணி திருவாரூர் ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணையின் கழுகு பார்வை காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன
88வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூரில் 80 மீட்டர் நீளமுள்ள மூவர்ண கொடி அணிவகுப்பு நடைபெற்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.















