முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில் இருந்து மண்டியிட்டு வந்து மனு கொடுத்த தூய்மை பணியாளர், மயிலாடுதுறையில் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம் (47). இவர் 2013 ஆம் ஆண்டு முதல் நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். சமூக சேவையில் அக்கறை உள்ள சிவானந்தம், வெள்ளப்பெருக்கு காலங்களில் சென்னை கஜா புயல் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணி மேற்கொண்டுள்ளார். கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 25 முறை ரத்ததானம் அளித்துள்ளார். இவரின் சேவையை பாராட்டி குத்தாலம் ஒன்றிய அலுவலகத்தில் சிவானந்தத்தின் சமூக பணியை பாராட்டி முதலமைச்சர் விருது வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
எனக்கு முதலமைச்சர் விருது வழங்க பரிந்துரைக்கும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவானந்தம் பலமுறை மனு அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தனது கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் பதாகை படத்துடன் கையில் மனுவை ஏந்தி மாவட்ட ஆட்சியர் வாயிலில் இருந்து மண்டியிட்டு சென்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உறுதி அளித்தார்.













