வழுதலைக்குடி கிராமத்தில் விதிமுறைகளை மீறி 40 அடி ஆழத்திற்கு மண் எடுப்பதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியாக வந்து மனு அளித்ததால் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வழுதலை குடி கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. கடற்கரையின் மிக அருகில் இருக்கும் இந்த கிராமத்தில் ஏற்கனவே 10 மணல் குவாரிகள் மணல் எடுத்த காரணத்தால் கிராமத்தைச் சுற்றி நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு உபநீராக மாறி உள்ளது இதன் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர் தற்பொழுது குடியிருப்பு பகுதிக்கு மிகவும் அருகாமையில் தனியார் மணல் குவாரி செயல்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது 40 அடிக்கு மேல் மணல் எடுத்த காரணத்தால் விவசாயம் மட்டும் இன்றி குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆழமான நீர் நிலைகளில் கால்நடைகள் தவறி விழுந்து உயிரிழந்து வருவதாகவும் தெரிவித்து வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மற்றும் கிராமத்தினர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்கள் பகுதியில் மணல் குவாரியை தடை செய்ய வேண்டும் என்று அப்போது அவர்கள் கேட்டுக்கொண்டனர்.













