உதயநிதி ஸ்டாலின்,
யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது நல்ல அரசியல் தலைவருக்கு அழகுயன வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆகஸ்ட் 3, 4, ஆகிய தேதிகளில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, தொகுதிகள் உள்ள வட்டார, நகர, தலைவர்கள் மற்றும்
அனைத்து நிலை பொறுப்பாளர்களுகான இரண்டு நாட்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
அதில் இரண்டாவது நாள் நிறைவு நாளான இன்று கும்மிடிப்பூண்டி பொன்னேரி,
ஆகிய தொகுதிக்கு உட்பட்ட
அனைத்து நிலை பொறுப்பாளர்களுகான
அவசர ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தலைமையில்
நடைபெற்றது,
இக்கூட்டத்தில் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம்
மக்களிடத்தில் சென்று மக்கள் பணி ஆற்றி மாபெரும் வெற்றி பெற வேண்டும் எனவும்,
வருகின்ற 2029 ஆண்டில்
பாராளுமன்றத் தேர்தலில்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, பிரதமராக வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும், அதற்கான பணியை ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது,
பின்னர்
செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார், தெரிவிக்கையில்
திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது நல்ல அரசியல் தலைவருக்கு அழகு என்றும்,
முதல்வர் மட்டுமல்ல சராசரி மனிதர்களின் தனிப்பட்ட விதத்தில் அவர்களை விமர்சிப்பதை காங்கிரஸ் பேரியக்கம் பார்த்துக் கொண்டு இருக்காது என்றும்,
அதற்கு பதிலடி கொடுக்க விதத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர்,
கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.













