சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி அருகே தொடுவாய் மீனவர் கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன், காளியம்மன், அய்யனாரப்பன் உள்ளிட்ட சுவாமிகள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாத தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் கடந்த 22 ஆம் தேதி காப்பு கட்டி கிராம மக்கள் விரதம் மேற்கொண்டனர். அதிலிருந்து தினந்தோறும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. மூன்றாம் வெள்ளிக்கிழமை இன்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருநதீ குண்டத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த தீமிதி திருவிழாவில் திருமுல்லைவாசல், கூழையார், எடமணல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.













