மயிலாடுதுறையில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கால்ஸ் குழுமம் மற்றும் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் இணைந்து கரும்பு மற்றும் நொல் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.ஏராளமான விவசாயிகள் பங்கேற்று :-
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த சோழன் பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆரூரான் சர்க்கரை ஆலை, கால்ஸ் குழுமம் மற்றும் மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்துடன் இணைந்து கரும்பு மற்றும் நெல் விவசாயத்தில் ஈடுபட விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சர்க்கரை ஆலை முதுநிலை மேலாளர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட மயிலாடுதுறை மாவட்ட துணை வேளாண் துறை துணை மேலாளர் சுப்பையன்,மெட்ராஸ் பெட்டிலைசர் நிறுவனத்தின் கூடுதல் மேலாளர் கோவிந்தராசு ஆகியோர்கள் கலந்து கொண்டு கரும்பு கருப்பு விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் சாகளுக்கு பயிற்சி அளித்தனர். மேலும் டெல்டா மாவட்டத்தில் அதிகம் நெல் சாகுபடி செய்வதால் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆனந்தகுடி,பொன்னூர் பாண்டூர்,சோழன்பேட்டை, திருமங்கலம், காளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் .
இக்கூட்டத்தில்
விவசாயிகளிடம் ஆலை முதுநிலை மேலாளர் ஆனந்தகுமார் பேசுகையில், கரும்பு விவசாயம் செய்வதற்கு வங்கி கடனுதவி செய்து தரப்படும் ,ஒரு ஏக்கருக்கு கரும்பு நடவிற்காக ரூ.13,000 மானியமாக வழங்கப்படும்,விவசாயி நிலத்திலேயே விதை கரும்பு உற்பத்தி செய்து தரப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பூஞ்சாணக் கொல்லி மருந்துகள், நுண்ணூட்டச் சத்து உரங்கள், உயிர் உரங்கள் உள்ளிட்ட அனைத்தும் 50 சதவீத மானியத்தில் ஆலையின் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும், ஆலைக்கு கரும்பு ஏற்றி முடித்தவுடன், கரும்புக்கான கிரயத் தொகை அரசின் ஆணைப்படி ஆலை நிர்வாகம் மூலம் உரிய காலத்தில் வழங்கப்படும் என்றும், ஆலை நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து, நெல் சாகுபடியில் மத்திய அரசால் வழங்கப்படும் உரங்கள் பற்றியும் அடி உரம் பயன்படுத்தும் விதம் பற்றியும் கூடுதல் மேலாளர் கோவிந்தராசு மற்றும் விஜயராகவன் சுப்பையன் உள்ளிட்ட வேளாண்மை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக ஏற்படுவதால் மாற்று பயிராக கரும்பு சாகுபடி செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என விவசாயிகள் பேசும்போது தெரிவித்தனர். இதனால் கரும்பு உற்பத்தியில் அதிக அளவு விவசாயிகள் தானாக முன்வருவதாக தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கரும்பு அலுவலர் ஜெயபாண்டியன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அவருடன் கரும்பு ஆய்வாளர்கள் கணேசன், லோகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பேட்டி : விவசாயிகள்













