மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி 10 நிமிடம் விவசாயிகள் போராட்டம்
கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தையும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தையும் மதிக்காமல் தமிழகத்திற்கு குறைந்தபட்ச குடி தண்ணீரை கூட வழங்காததை கண்டித்தும் தமிழக அரசின் குளறுபடியான பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை கண்டித்தும் போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம் தரங்கம்பாடி சீர்காழி ஆகிய நான்கு தாலுக்கா பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் திடீரென்று விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி பத்து நிமிடம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தையும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மதிக்காமல் தமிழகத்திற்கு குறைந்தபட்ச தண்ணீரை குடிதண்ணீருக்கு கூட வழங்காததை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காததை மத்திய அரசை கண்டித்தும், கர்நாடக அரசின் மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும். வகையில் பேசும் மத்திய அரசை கண்டித்தும்,
விவசாயிகள் அனைத்து கடன்களை தள்ளுபடி செய்யாமல் குளறுபடியான கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கண்களில் கருப்பு துணி கட்டி பத்து நிமிடம் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

















