சீர்காழியில் ஜனநாயகன் திரைப்படம் இரு திரையரங்குகளில் வெளியிடு.திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம் ரசிகர்கள் உற்சாகம் கொண்டாட்டம்.
தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகம் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு திரையிட திரைப்பட குழு முடிவு செய்த நிலையில் தணிக்கை சான்றுக்காக அனுப்பப்பட்ட போது தணிக்கை குழு சான்று வழங்குவதில் தாமதமான நிலையில் தற்பொழுது உலகெங்கும் பல்வேறு திரையரங்குகளில் தமிழக முதல்வர் நடித்த ஜனநாயகம் திரைப்படம் வெளியாகி உள்ளது இன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் உள்ள திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி உள்ளது நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு இன்று வெளியாகும் ஜனநாயகம் திரைப்படத்தை காண ரசிகர்கள் மற்றும் தவெகவினர் திரையரங்கு வாயிலில் வாழைமரம் தோரணம் கட்டி பேனர்கள் வைத்து தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர். சீர்காழியில் நுழைவாயிலில் மேளதாளங்கள் முழங்க விஜய் விரைவில் தோன்றிய போது ரசிகர்கள் சூடம் சுற்றி விஜய்க்கு திஷ்டி கழித்தனர்















