ஜனநாயகன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் ஆலயத்தில் தவெகவினர் சிறப்பு வழிபாடு :-
தமிழக முதலமைச்சர் சி ஜோசப் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி ஆறு மாதங்களுக்குப் பிறகு வருகின்ற ஜூலை 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தொடர்ந்து முதலமைச்சரின் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்கள் மற்றும் தவெகவினர் பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் தவெக சார்பில் ஜனநாயகம் திரைப்படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஜனநாயகன் திரைப்படத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.













