குஷி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்-ஏராளமானோர் பயன் பெற்றனர்.
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் குஷி ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை (ஜூலை 18) முன்னிட்டு, விழுப்புரம் பரணி மருத்துவமனை மற்றும் தட்சசீலா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது,டாக்டர் திருமாவளவன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், பொது மருத்துவம், எலும்பியல், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், அறுவை சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை (ENT), கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், ஈசிஜி (ECG) உள்ளிட்ட பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து பயனடைந்தனர். முகாமில் தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் குஷி மோகன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டு சிறப்பித்தார். மருத்துவ கு முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட இணை செயலாளர் விஜய் காளிதாஸ்













