கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு வேதனையில் விவசாயிகள் தவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்தில் சுமார் 8000 ஏக்கருக்கு மேல் குருவை நெல் சாகுபடி விவசாயிகள் செய்துள்ளனர் குருவை சாகுபடியில் விவசாயிகள் காவிரி தண்ணீரையே நம்பி சாகுபடி செய்துள்ளனர் மேலும் மழை பெய்யும் என்றும் நம்பி இருந்த நிலையில் தற்பொழுது நெற்பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் மழையும் பெய்யவில்லை காவிரியில் தண்ணீரும் திறந்து விடாத நிலையில் குருவை சாகுபடி முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது தரங்கம்பாடி தாலுகாவில் குறிப்பாக கிள்ளியூர் ஊராட்சியில் குருவை சாகுபடியில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் நம்பியிருந்த விவசாயிகள் வேதனடைந்துள்ளனர் குருவை சாகுபடியில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் ஒரு மாத கால பயிர்கள் தற்பொழுது வேர்கள் அழுகியும் நெற்பயிர்கள் கருகியும் பாதிக்கப்பட்டுள்ளது சில இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்தாலும் மோட்டார் மூலம் கிடைக்கும் தண்ணீர் உப்பு நீராக உள்ளதால் இதன் மூலமும் கிடைக்கும் தண்ணீர் பயனற்று உள்ளது இதனால் குருவை சாகுபடி செய்த விவசாயிகள் செய்வது அறியாமல் தவிக்கின்றனர் மேலும் தரங்கம்பாடி தாலுகாவில் இதேபோன்று மாத்தூர் நல்லிச்சேரி கீழ்மாத்தூர் ஆக்கூர் உட்பட பல இடங்களில் குருவை சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி உள்ளது இதனால் விவசாயிகள் தற்பொழுது தண்ணீர் இன்றி கண்ணீரில் வேதனை அடைந்துள்ளனர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் வேளாண்மை துறையினர் வந்து பார்க்கவில்லை எனவும் ஆலோசனைகள் வழங்கவில்லை எனவும் விவசாயிகள் கூறுகின்றனர் எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட நெற்ப்பயிர்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்














