தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறையை நீக்குவதற்காக கடந்த திமுக ஆட்சியில் புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்க உறுதி அளிக்கப்பட்ட நிலையில் புதிதாக ஆட்சி அமைந்த தமிழக வெற்றிக் கழகம் புதிதாக செவிலியர் பணியிடங்களை உருவாக்காமல், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறிதியில் அறிவித்தவாறு அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோரியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியை தமிழர் வெற்றிக் கழகம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.














