திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் கிராமத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் பகுஜன் எம்.பிரேம் தாயார் எம்.சுகுணாவின் 16 ஆம் நாள் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பௌத்த முறைப்படி பஞ்சஸ்கந்த நினைவேந்தல் கூட்டத்துடன் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கலந்துகொண்டு பின்னர் மேடையில் அலங்கரிக்கப்பட்ட எம்.சுகுணாவின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து. மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வின் போது பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் என்கிற குட்டி, மற்றும் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் திருத்தணி டி.மைக்கேல்தாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














