சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து
சீர்காழி, ஜூன் 29: சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திங்கள்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் சேமிக்கப்படும் குப்பைகள் ஈசானிய தெருவில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தரம் பிரித்து கொட்டப்பட்டு வருகிறது சேமிக்கப்படும் குப்பைகள் கடந்த சில மாதங்களாக தரம் பிரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்த நிலையில் மாலை திடீரென்று குப்பை கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டது இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றன திடீர் தீ விபத்தால் அந்த பகுதியை முழுவதும் புகைமண்டலம் நிலவியதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்

















