தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தலின் பெயரில் திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொறையார் காவல் துறை இணைந்து நடத்திய சர்வதேச போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணி திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் போதை ஒழிப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியபடியும், போதை ஒழிப்பிற்கு எதிரான முழக்கங்களை முழங்கியபடியும் பேரணியாக வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.













