சத்தியமா புதிதாக போட்டதாக கூறப்படும் ரோட்டை காணோம், வடிவேல் பட காமெடி பாணியில், திமுக நகர மன்ற தலைவரை பார்த்து குற்றம் சாட்டி பேசிய மதிமுக கவுன்சிலர், திமுக கட்சியினருக்கு கூட மரியாதை இல்லை பணம் கொடுத்தால் தான் வேலையே நடக்கிறது, திமுக கவுன்சிலர் வேதனை குற்றச்சாட்டு, மயிலாடுதுறை நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு விவாதம் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் மயிலாடுதுறை நகராட்சியில் சாலை போடும் பணிகளில் தரமற்ற பொருட்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும், தொடர்ந்து ஒரே நபருக்கு சாலை போடும் கான்ட்ராக்ட் கொடுக்கப்படுவதாகவும் இதில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன என்றும், புதிதாக போடப்பட்ட சாலை ஒன்று மூன்று மாதங்களில் ஜல்லிக்கட்டு பழுதடைந்து விட்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக கவுன்சிலர் ரிஷி என்பவர் குற்றம் சாட்டி பேசினார். மேலும் திமுகவிற்கு தேர்தலில், வாக்கு சாவடியில் அமர்ந்து வேலை பார்த்த நபருக்கு கூட எந்த வேலையும் நடைபெறுவதில்லை, பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே மயிலாடுதுறை நகர்மன்றத்தில், வேலை நடக்கின்றன என்று குற்றம் சாட்டி பேசினார். இதனைத் தொடர்ந்து மதிமுக நகர மன்ற உறுப்பினர் மார்க்கெட் கணேசன் என்பவர் பேசும்பொழுது, புதிதாக ரோடு போட்டதாக சொன்னார்கள் ரோட்டை காணவில்லை, சத்தியமா ரோட்டை காணவில்லை என்று வடிவேல் பட காமெடி பாணியில் திமுக நகரமன்ற தலைவரை பார்த்து கேட்டார், ரோடு பழுதடைந்து இருந்தால் புதிதாக போடச் சொல்லுவோம் என அதற்கு பதில் அளித்து பேசிய திமுக நகர மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் சாலை பழுதடைந்தால் அதனை பேட்ச் ஒர்க் பார்த்துக் கொள்ளவும் என்று சமாளித்து பேசினார். திமுகவைச் சேர்ந்த நகர மன்ற தலைவர் உள்ள மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது













