கன்னியாகுமரி மாவட்டம்: குடும்ப முன்விரோதம் காரணமாக குடிநீரில் மலம் கலந்த கொடூரம்- பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண் சுமார் 2 வருட காலங்களாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாற்றுத்திறனாளி பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.
குடும்ப முன்விரோதம் காரணமாக குடிக்கும் குடிநீரில் மனித மலத்தை கலந்து அச்சுறுத்தலில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் புகார் அளத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மீனச்சல் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிமிலா ரஜி (46) தன் கணவருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அண்டை வீட்டில் வசித்து வரும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் கருத்து வேறுபாடு மற்றும் சொத்து பிரச்சனை காரணங்களால் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளியான சிமிலா ரஜி வீட்டில் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த கிணற்றில் குடும்ப முன்விரோதம் காரணமாக மனித மலத்தை கலந்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு அரசு அங்கீகரித்த தனியார் ஆய்வகத்தில் அந்த நீரை சோதித்ததில் அதில் மனிதம் மலம் அதிக அளவு கலந்திருப்பது மருத்துவப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் அருகிலுளள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் எவ்வித தீவிர விசாரணையும் இல்லாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி ஆன பெண்ணை மிகவும் தரை குறைவாக மற்றும் ஆபாச வார்த்தைகளால் பேசுவதுடன் குடும்பத்தினரையும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இதுகுறித்து சிசிடிவி மற்றும் மருத்துவ ஆதாரங்கள் சமர்ப்பித்தும் இதுவரை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால். மாற்றுத்திறனாளி பெண் சிமிலா ரேஜி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் அளித்திருந்தார். புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவளித்தார்.













