மயிலாடுதுறை ரயிலடியில் புகழ்பெற்ற ஆபத்துதாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில், ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, புஷ்ப யாகம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயிலடியில் புகழ்பெற்ற ஆபத்துதாரண ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஆனி மாத அஸ்தம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு, பத்தாம் ஆண்டு புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வாசனை மலர்கள் மற்றும் , துளசி ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அர்ச்சனையும், சகஸ்ரநாமமும் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.















