மயிலாடுதுறையில் பல்வேறு தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய பொது தொழிலாளர் சங்கத்தின் மே தின கொடியேற்ற விழாவில் சங்கத் தலைவர் ஜெக வீர பாண்டியன் தலைமையில் ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சங்ககொடியேற்றி வைத்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள், ஆசிரியர் மீனவர், நரிக்குறவர்கள், ஓவியர்கள் தேசிய விவசாயிகள், கீற்றுமுடைவோர், கைவண்டி இலுப்போர், செருப்பு தைப்போர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் பொதுத் தொழிலாளர் சங்கம் என்ற ஒரே சங்கத்தின் கீழ் இயங்கி வருகின்றன. சங்கத்தின் சார்பில் மே தின விழா 41 ஆம் ஆண்டு கொடியேற்றம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜெக வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சண்முகநாதன் சங்ககொடியை ஏற்றி வைத்தார். இதில் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனூஸ், திமுக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மே 31 ஆம் தேதி பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மிகப்பெரிய பேரணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.















