பூம்புகார் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இளைய நகுலன் ஏர் கலப்பையுடன் மாட்டு வண்டியில் வந்து தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இளைய நகுலன் தனது ஆதரவாளர்களுடன் ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து பொறையார் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாட்டு வண்டியில் ஏர் கலப்பையுடன் பொறையாறில் உள்ள தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

















