சித்தர்காடு பிடாரியம்மன் ஆலயத்தில் பாரம்பரியமிக்க மன்மதனுக்கு காமன் பண்டிகை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கொண்டாடப்பட்டது;-
மயிலாடுதுறை பிப் 03;
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் எல்லை அம்மன் எனும் பிடாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க மன்மதனுக்கு காமன் பண்டிகை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கொண்டாடப்பட்டது
தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்து வருகிறது. சிலப்பதிகாரம்,கலித்தொகை உள்பட பழந்தமிழ் நூல்களில் பெருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காமன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்க்காடு பகுதியில் அமைந்துள்ள பிடாரியம்மன் அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மன்மதனுக்கு பரமசிவன் தவம் கலைப்பு மன்மதனை காம தகனம் செய்யும் நிகழ்வும் மூன்றாம் குழி மூடும் நிகழ்வு மற்றும் மன்மதன் உயிர்பிக்கும் நிகழ்வு தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது
தமிழர்கள் தலைமுறைகள் பல கடந்தாலும் தங்களது கலாச்சாரம், பாரம்பரிய பண்டிகையை 40 ஆண்டுகளுக்கு பின்னர் கொண்டாடி வருகின்றனர்.

















