சிறப்பு பணிப்பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஃபெரா கூட்டமைப்பினர் மயிலாடுதுறையில் 9-வது நாளாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் போராட்டம்:- சங்கு ஊதியபடி சாலை மறியலில் ஈடுபட்ட போது 150 பேர் கைது:-
வருவாய் துறை ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை விரைந்து இயற்ற வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும், தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு நிலஅளவை ஒன்றிப்பு, கடைநிலை கிராம ஊழியர் சங்கம் ஆகிய சங்கங்களை உள்ளடக்கிய ஃபெரா கூட்டமைப்பினர் பிப்.24-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 9-வது நாளான இன்று நிர்வாகிகள் சங்கு ஊதியபடி மாவட்ட ஆட்சியரகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் வலுக்கட்டாய அங்கிருந்து அகற்றி கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமணக்கூடத்துக்கு கொண்டு சென்றனர்.















