கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பாக தொடர் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கருப்பு பட்டை அணிந்து நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெருவதாகவும், மாநில நிர்வாகிகளை அவைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், முழு நேரப் பணியாளராக அறிவித்த நிலையில், அரசு அறிவிக்கும் அனைத்துப் பணிகளையும் இரவு பகல் என்று பார்க்காமல் தாங்கள் செய்வதாகவும், திமுக ஆட்சி வந்ததும் செய்யும் என சொல்லி ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், கிராமத்தில் உள்ள அனைவரையும் அடையாளம் காட்டுவதே தாங்கள் தான் என்றும், வருவாய்த்துறை அமைச்சர் உறுதி அளித்து அதை நிறைவேற்றாததால் இந்த போராட்டத்தை தற்போது தொடர்வதாகவும், எங்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்.
பேட்டி- சந்திரசேகர் – மாவட்ட செயலாளர் வருவாய் கிராம ஊழியர் சங்கம்

















