மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் அரசின் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனரா வங்கியின் எட்டாவது கிளையை கருவாழக்கரையில் திறந்து வைத்த புதுச்சேரி மண்டல மேலாளர் தருண் பேட்டி :-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பன்னார்கோயில் அருகே கருவாழக்கரையில் கனரா வங்கி சார்பில் எட்டாவது கிளை இன்று துவக்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி மண்டலத்துக்குட்பட்ட 54 வது கிளையான இதனை, புதுச்சேரி மண்டல மேலாளர் தருண் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் பொழுது, மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகள் சார்ந்த பகுதியாகும். விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு, மற்றும் அது சார்ந்த கடன்கள் பெறுவதற்கும் வேளாண் கருவிகள் வாங்குவதற்கும் முன்னுரிமை அளித்து கடன் வழங்கி வருகிறோம். ஆவணங்கள் சரியாக இருப்பின் உடனடியாக கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பான சேவையை தொடர்வதற்காக இன்று எட்டாவது கிளை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

















