October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“திமிலோடும் திமிரோடும் களமாடிய காளைகள்”: புதுக்கோட்டை, திருச்சியில் ஜல்லிக்கட்டு!

by sowmiarajan
February 2, 2026
in News
A A
0
“திமிலோடும் திமிரோடும் களமாடிய காளைகள்”: புதுக்கோட்டை, திருச்சியில் ஜல்லிக்கட்டு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றன. இரண்டு இடங்களிலும் சேர்த்து மொத்தம் 1,250 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவற்றை அடக்க 600 மாடுபிடி வீரர்கள் களத்தில் மல்லுக்கட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள காட்டுப்பட்டியில் அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 650க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. போட்டியில் பங்கேற்ற 300 வீரர்களும் முறைப்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டதை அடுத்து, காலை 9 மணிக்கு ஆர்டிஓ ஐஸ்வர்யா போட்டியைத் தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, அதனைத் தொடர்ந்து சீறிப்பாய்ந்து வந்த மற்ற காளைகளை வீரர்கள் துணிச்சலுடன் அடக்கினர். சில காளைகள் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாட்டு காட்டியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், மின் விசிறி, மிக்சி, கட்டில், டைனிங் டேபிள், சைக்கிள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி டிஎஸ்பி மனோகர் தலைமையிலான போலீசார் கவனித்துக் கொண்டனர்.

இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தீராம்பட்டியில் புனித அந்தோணியார் பெருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். காலை 9 மணிக்கு ஆர்டிஓ சீனிவாசன் மற்றும் டிஎஸ்பி காவியா ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் செவலூர் சின்னாகவுண்டர் காளையும், அதனைத் தொடர்ந்து கோயில் காளையும் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த மற்ற காளைகளின் திமிலை அணைத்து வீரர்கள் தங்கள் வீரத்தை பறைசாற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு கட்டில், சைக்கிள், பீரோ, பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள் பரிசுகளாக வாரி வழங்கப்பட்டன. சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு இடங்களிலும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளும் வீரர்களும் சரிசமமாகப் போராடியது தமிழகத்தின் வீர மரபை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியது.

Tags: arena Pudukkottaibullsevent FerocityJallikattutrichy
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தென்கயிலை தரிசனம்”: வெள்ளிங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி – சாதுக்கள் வழிபாடு!

Next Post

“சாலையில் நேர்ந்த சாவுக் கோலம்”: முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
“சாலையில் நேர்ந்த சாவுக் கோலம்”: முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி

"சாலையில் நேர்ந்த சாவுக் கோலம்": முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.