September 20, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு

by sowmiarajan
January 16, 2026
in News
A A
0
பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வடகாடு ஊராட்சியின் முக்கிய நீர் ஆதாரமான பரப்பலாறு அணையிலிருந்து, விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அணையின் மதகுகளைத் திறந்து வைத்து, சீறிப்பாயும் நீரினை மலர் தூவி வரவேற்றார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 1974-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை, அப்பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், விவசாயப் பணிகளுக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணையைத் திறந்து வைத்துப் பேசிய அமைச்சர் அர.சக்கரபாணி, தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தற்போது வினாடிக்கு 35 கன அடி வீதம் அடுத்த 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள்குளம், முத்துபூபாலசமுத்திர கண்மாய், சடையன்குளம், செங்குளம், இராமசமுத்திரம் கண்மாய் மற்றும் ஜவ்வாதுப்பட்டி பெரியகுளம் ஆகிய 6 முக்கிய கண்மாய்கள் முழுமையாக நிரம்பும். இதன் நேரடி மற்றும் மறைமுகப் பாசன வசதி மூலம் சுமார் 1323 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், கடந்த பல ஆண்டுகளாகப் படிந்துள்ள வண்டல் மண்ணால் அணையின் கொள்ளளவு குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அதனைத் தூர்வார முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

அணை தூர்வாரும் பணிகள் இன்னும் சில தினங்களில் முறைப்படி தொடங்கப்பட உள்ளன. தூர்வாரப்படும் போது கிடைக்கும் சத்துக்கள் நிறைந்த வண்டல் மண்ணை, வடகாடு பகுதி விவசாயிகளின் நிலங்களுக்கு மேம்பாட்டிற்காக வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் சஞ்சய் காந்தி, ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், எஸ்.ஆர்.கே. பாலு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார் மற்றும் மாவட்டப் பிரதிநிதிகள் சண்முகம், பாண்டி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் தனஜெயன், உதவி பொறியாளர் நிவாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags: damFARMERSParappalarRelease Irrigationwater
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஏழை மாணவர்களுடன் பொங்கல் வைத்து மகிழ்ந்த ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் தம்பதி

Next Post

“தைப்பூசத் திருவிழா” – நகரியில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்!

Related Posts

குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 
News

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026
Next Post
“தைப்பூசத் திருவிழா” – நகரியில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்!

"தைப்பூசத் திருவிழா" - நகரியில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

September 15, 2026
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்கள் மத்தியில் ஊக்க உரை

September 1, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

0
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

September 17, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

September 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.