April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தாமிரபரணி அழிவு நிலைக்குச் சென்றுள்ளது” ‘இந்தியாவின் நீர் மனிதர்’ ராஜேந்திர சிங் எச்சரிக்கை!

by sowmiarajan
January 6, 2026
in News
A A
0
தாமிரபரணி அழிவு நிலைக்குச் சென்றுள்ளது” ‘இந்தியாவின் நீர் மனிதர்’ ராஜேந்திர சிங் எச்சரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வைகுண்டம் முதல் பாபநாசம் வரை உயிரோட்டமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றின் தற்போதைய அவலநிலை குறித்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையால் நியமிக்கப்பட்ட ஆணையரும், புகழ்பெற்ற நீர் பாதுகாப்பு நிபுணருமான ராஜேந்திர சிங் நேரடி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில், முறையற்ற நவீன வளர்ச்சியால் தாமிரபரணி ஆறு அழிவை நோக்கிச் செல்வதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காமராசு, தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கவும், கழிவுகள் கலப்பதைத் தடுக்கவும் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், ஆற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறிய ராஜஸ்தானைச் சேர்ந்த ‘இந்தியாவின் நீர் மனிதர்’ (Waterman of India) என்று அழைக்கப்படும் மெக்சேசே விருது பெற்ற ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்தது. இதன்படி, கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அவர் தீவிர கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மேலாத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வர பாஞ்சான் மற்றும் போ பாஞ்சான் மடைகள் வழியாக நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சாக்கடைக் கழிவுகள் எவ்வித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக ஆற்றுக்குள் கலப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள நீரின் மாதிரிகளைச் சோதனைக்காக அதிகாரிகள் முன்னிலையில் சேகரித்துக் கொண்டார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர சிங், “தாமிரபரணி ஆற்றின் நெடுகிலும் சுமார் 25 முக்கிய இடங்களை இதுவரை ஆய்வு செய்துள்ளோம். அந்தந்தப் பகுதியின் புவியியல் அமைப்பு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஆற்றின் தூய்மையை மீட்டெடுக்கத் தனித்தனியான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரைச் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரித்தோ அல்லது தனியான ஓடைகள் மூலமாகவோ ஆற்றில் கலப்பதைத் தடுக்க முடியும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இயற்கை, கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த தாமிரபரணி, பாபநாசத்தில் தொடங்கி கடலில் கலக்கும் வரை தடையின்றி ஓட வேண்டும். ஆனால், ‘வளர்ச்சி’ என்ற பெயரில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பம்பிங் ஸ்டேஷன்கள் மற்றும் தடுப்பணைகள் இயற்கையோடு ஒத்திசைவாகக் கட்டப்படவில்லை. இந்தத் தவறான திட்டமிடல்களால் இன்று தாமிரபரணி ஆறு தன் அடையாளத்தை இழந்து அழிவு நிலைக்குச் சென்றுள்ளது,” என எச்சரித்தார்.

இந்த ஆய்வின் போது மனுதாரர் காமராசு, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். ராஜேந்திர சிங் அளிக்கப்போகும் அறிக்கை, தாமிரபரணி ஆற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகிறது.

Tags: destructionriversinghThamirabaraniwarning Rajendra
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நண்பரைக் கொன்றுவிட்டு சடலம் அருகிலேயே போதையில் உறங்கிய கும்பல் – கிண்டல் செய்ததால் நடந்த விபரீதம்!

Next Post

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ‘கைத்தல சேவை’ கோலாகலம் இன்று ராப்பத்து எட்டாம் திருநாள் உற்சவம்!

Related Posts

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
News

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
Next Post
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ‘கைத்தல சேவை’ கோலாகலம் இன்று ராப்பத்து எட்டாம் திருநாள் உற்சவம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் 'கைத்தல சேவை' கோலாகலம் இன்று ராப்பத்து எட்டாம் திருநாள் உற்சவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.