August 2, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்

by Priscilla
October 15, 2025
in News
A A
0
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
0
SHARES
21
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இத்தகைய துயரச்சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு நாட்கள் நடைபெறும் சட்டசபைக் கூட்டத் தொடர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று தொடங்கியது. அதன் முதல் நாளில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், கரூர் துயரச் சம்பவம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார்.

அவர் தெரிவித்ததாவது:
“தவெக சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசு 11 நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தது. கூட்டத்தின் பாதுகாப்புக்காக மொத்தம் 606 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். கோரிக்கை மனுவில் 10,000 பேர் பங்கேற்பார்கள் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அதைவிட அதிகமான மக்கள் திரண்டனர். மேலும், தவெக தலைவர் விஜய், அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கூட்டத்திற்கான அடிப்படை வசதிகள், குடிநீர், உணவு, பெண்களுக்கான தனி வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். மீட்புப் பணிக்காக வந்த ஆம்புலன்ஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு மாறாக, அதே இடத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒழுங்காக நடந்தது. அப்போது 12,000 பேர் பங்கேற்றிருந்தாலும் எந்தத் துயரமும் நிகழவில்லை,” எனவும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து முதல்வர் உருக்கமாக கூறுகையில்,

“நான் 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் பல பெரிய நிகழ்வுகளை நடத்தியிருக்கிறேன். சட்ட விதிமுறைகளையும் பொது ஒழுங்கையும் மதித்து நடத்தினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. விதிகளை மீறும்போது பாதிக்கப்படுவது கட்சித் தொண்டர்கள்தான். இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். ஆனால், முக்கியமாக கரூர் போன்ற துயரச்சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழக்கூடாது என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்க வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Tags: assemblykarurKARUR STAMPEDEmk stalintamil naduTN CHIEF MINISTERtn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Next Post

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
News

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026
Next Post
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் - EPS குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் திருவாரூர் நகராட்சியை கண்டித்து கழிவுநீர் வாகனத்தை சிறை

July 29, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.