நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மே 1ம் தேதி திரைக்கு வரும் இந்த படம் திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இதன் ப்ரீ ரிலீஸ் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது, இதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் பங்கேற்றார்.
இந்த விழா மேடையில் கலந்து கொண்டு பேசும் போது, சூர்யா தனது அடுத்த படத்தை அறிவித்தார். இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். சூர்யாவின் அடுத்த படத்தின் ஷூட்டிங் மே மாதம் ஹைதராபாத்தில் துவங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த படத்தை சித்தாரா எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் அடுத்த படத்துக்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர், மேலும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய பரிமாணத்தை எதிர்பார்க்கலாம்.


















