நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இன்று மாலை 4.46 மணிக்கு அரசியல் களத்தில் அதிர்வலை கிளப்பக்கூடிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “நண்பர்களே.. இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!!” என பதிவு செய்துள்ளார்.
இந்த அறிவிப்பு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கிய நாளில் வெளிவந்துள்ளதால், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ‘அறிவு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பார்த்திபன், அடுத்த மாதம் 1 ஆம் தேதி வெளியாக உள்ள அந்த படத்தால் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் இந்த அரசியல் குறிப்பு, ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு ஊகங்களை தூண்டியுள்ளது.
சிலர், பார்த்திபன் அரசியலுக்கு வரப்போகிறாரோ என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
மற்றொருபுறம், அவரது புதிய படத்தைச் சார்ந்த வித்தியாசமான விளம்பர முயற்சியாக இருக்கலாம் என்றும் கருத்துகள் கிளம்பியுள்ளன.
எதுவாக இருந்தாலும், மாலை 4.46க்கு வெளியாக உள்ள பார்த்திபனின் அறிவிப்பு, சமூக வலைதளங்களில் ஏற்கனவே வைரலாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.