கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் ஆற்றூர் பகுதியில் மாவேலி மன்னரை வரவேற்கும் விதமாக அத்தபூ கோலமிட்டு,திருவாதிரை நடனமாடி உற்சாகமாக ஓணம் கொண்டாடிய அதிமுகவினர்
மலையாள மொழி பேசும் மக்கள் கடந்த அத்தம் நட்சத்திரம் முதல் ஓண பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில் ,
கன்னியாகுமரி மாவட்டத்திலும் கல்லூரிகள் அமைப்புகள், கட்சிகள் சார்பிலும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் டாக்டர் கிளாடிஸ் லில்லி மற்றும் மகளிரணி சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதர்சன், கழக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான சின்னதுரை தலைமையிலும் ஆற்றூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவேலி மன்னரை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலம் போட்டு கேரள பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் திருவாதிரை நடனம் ஆடினர் அப்போது அந்தப் பெண்களுடன் குழந்தை ஒன்று பாட்டுக்கு ஏற்றபடி ஆடியது அங்குள்ள பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது ஓணம் பண்டிகை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பேரூர் கழகச் செயலாளர்கள் அணிச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

















