March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா- இரண்டாவது நாள்!

by Divya
August 30, 2025
in Bakthi
A A
0
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா- இரண்டாவது நாள்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர்.

விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம்,கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி நாகை மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஒய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிய அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.

சிலர் தென்னங்கன்றுகளை வாங்கி ஆலயத்தில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

Tags: nagaivelankannivelankanni churchvelankanni madha temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

Next Post

ஆசியக் கோப்பை ஹாக்கி : சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

Related Posts

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்
Bakthi

March 1, 2026
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரு பரிகா தலமான வாகீஸ்வரர் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மகோற்சவம்

கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி பிரமோற்சவ விழா தன் தவத்தை கலைத்த மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன திருவிழா

February 28, 2026
மயிலாடுதுறையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியின் நினைவாக தீப்பாய்ந்தாள்அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

February 24, 2026
Next Post
ஆசியக் கோப்பை ஹாக்கி : சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

ஆசியக் கோப்பை ஹாக்கி : சீனாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குன்னூரில் கலெக்டர் லட்சுமிபவ்யா அதிரடித் தொடக்கம் – இனி வீடு தேடி வரும் உயர்தர சிகிச்சை!

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

March 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.